தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? கருத்து கூற மறுத்த எம்.பி
மகாநாயக்க தேரர்களும், ஆட்சியிலுள்ளவர்களும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைத்து வரும் இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து கூற விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கொழும்பு ஊடகமொன்று வினவிய போதே அவர் இந்த விடயத்தை புறக்கணித்துள்ளார்.
அத்துடன், முதலில் மகாநாயக்க தேரர்களும் ஆட்சியில் உள்ளவர்களும் நாட்டின் எதிர்கால நன்மை கருதி ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கருத்துக்களை முன்வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்த நிலையில், அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? கருத்து கூற மறுத்த எம்.பி
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment