சுத்தமான குடிநீர்: 11 வயது சிறுமியின் அபார கண்டுபிடிப்பு -
உலகளாவிய ரீதியில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதற்கிடையில் தற்போது உள்ள குடிநீரும் பல்வேறு காரணங்களால் மாசடைந்து வருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே அண்மையில் ஓர் அதிர்ச்சி தகவல் வேகமாக பரவிவந்தது.
அதாவது குழாய்கள் மூலம் பருகும் குடிநீரில் ஈயம் போன்ற பதார்த்தம் கலப்பதாக தெரிவிக்கப்பட்டது.
குழாய்கள் உருவாக்க பயன்படும் ஈயமே இவ்வாறு நீரில் கலப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இப் பிரச்சினைக்கு ஆறுதல் தரும் வகையில் 11 வயதே ஆன பள்ளிச் சிறுமி அபார கண்டுபிடிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
Gitanjali Rao எனும் அச் சிறுமி நீரில் கலந்திருக்கும் ஈயத்தினை கண்டறியக்கூடிய சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
Tethys என குறித்த சிறுமி பெயரிட்டுள்ள இச் சாதனம் குறைந்த விலையிலேயே உருவாக்கப்பட முடியும் என்பது சிறப்பம்சமாகும்.இதேவேளை சிறுமிக்கு அமெரிக்காவின் Top Young Scientist எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், 25,000 டொலர்கள் பணப்பரிசிலும் வழங்கப்பட்டுள்ளது.
சுத்தமான குடிநீர்: 11 வயது சிறுமியின் அபார கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment