வித்தியா கொலை வழக்கு தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல் -
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமாரை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், சுவிஸ் குமார் தப்பிச் செல்வதற்கு அரசாங்கத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை.
குறித்த கொலையாளி தப்பிச் செல்வதை தடுப்பதற்கே அரசாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியா கொலை வழக்கு தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல் -
Reviewed by Author
on
November 28, 2017
Rating:

No comments:
Post a Comment