மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி- மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு-(படம்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி, மற்றும் பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
எனவே குறித்த இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களுக்குரிய மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களை எதிர்வரும் 27ம் திகதி மாலை உரிய நேரத்திற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறித்த மாவீரர் துயிலும் இல்லங்களில் சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளமையால் அனாவசியமற்ற குழப்பங்களை எவரும் ஏற்படுத்த வேண்டாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.என மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி- மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு-(படம்)
Reviewed by Author
on
November 22, 2017
Rating:
Reviewed by Author
on
November 22, 2017
Rating:







No comments:
Post a Comment