மன்னார் பிரதேச கலாசார விழா 21-11-2017 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வருடா வருடம் நடைபெறும் கலாசார விழாவானது இம்முறையும் மன்னார் பிரதேச செயலாளர் M,பரமதாசன் தலைமையில்
பி.ப 02மணிக்கு
புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில்
புலவர் யேசுதாசன் அரங்கில்
பிரதவிருந்தினராக
M.Y. S.தேசப்பிரிய -அரசாங்க அதிபர் மன்னார் அவர்களும்சிறப்பு விருந்தினர்களாக
K.சிவசம்பு-உதவி பிரதேச செயலாளர் மன்னார் நகரம்
K.S.வசந்த குமார் பிரதேச செயலாளர்- முசலி
சிவசிஸ்ரீ தர்மகுமார குருக்கள்
அருட்பணி தமிழ்நேசன் அடிகளார்
S.E.றெயினோல்ட் (FSC) முதல்வர் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி
இவர்களுடன் அரச உயர் அதிகாரிகள் வைத்திய கலாநிதிகள் மூத்தகலைஞர்கள் இளங்கலைஞர்கள் மாணவ மாணவிகள் கலையார்வலர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்
மங்கள வாத்தியங்கள் இசையுடன் விருந்தினர்கள் சந்தன மாலை அணிவித்து வரவேற்றலுடன் மங்களவிளக்கேற்றலும் அதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடவும்
நிகழ்வுகளாக
- வரவேற்பு நடனம்-கவின் கலாலய கலா மன்றம்
- அரங்கத்திறப்புரை -எஸ்.யூட்சன்
- பாட்டு-திலக்சன் மன்.புனித.சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
- கரகநடனம்-பரத கலாலய கலா மன்றம்
- நாடகம்-அரிச்சந்திர மயான காண்டம்-கலைமகள் கலாமன்றம்
- பாட்டு மன்றம் நிகழ்வும்
சிறப்பு நிகழ்வாக
மன்னல் நூல்வெளியீடும்
மன்னல் நூல்வெளியீடும்
- நூல் அறிமுகவுரையை-மன்னார் அமுதனும்
- நூல் நயவுரையை திரு.தர்மராஜன் அவர்களும்
சிறப்பாக எடுத்தியம்ப
இன்னுமொரு சிறப்பு நிகழ்வாக
இலக்கியத்துறையிலும் நாட்டியத்துறையிலும் சேவையாற்றிய கலைஞர்கள் 07 பேருக்கு பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து பொன்னாடை யும் சந்தனமாலையணிவித்தும் கலைச்செம்மல் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இளங்கலைஞர் ஊக்கிவிப்பு திலக்சனுக்கு விருதும் அத்துடன் இலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவமாணவிகள் திறந்த பிரிவினர்கள் அனைவருக்கும் வெற்றிச்சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
விருந்தினர்கள் உரையின் சாரம்சமாக
இவ்வாறான விழாக்கள் எமது கலை கலாச்சாரம் பண்பாடு பேணிப்பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதாகவும் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் ஒவ்வொரு கலைஞர்களும் கலையின் ஊடாக கலாச்சாரத்தினை வளர்க்கவும் வாழ்வும் முனைப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக M.Y. S.தேசப்பிரிய அவர்கள் தனது உரையில் மங்களவாத்தியக்கலைஞர்களையும் கௌரவிக்க வேண்டும் அடுத்த கலாச்சாரவிழாக்களில் அதை செய்யும்படி விழாக்குழுவை கேட்டுக்கொள்கின்றேன் என்றார் .
K.சிவசம்பு-உதவி பிரதேச செயலாளர் அவர்களின் நன்றியுரையும் தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சித்தொகுப்பினை- S.சதீஸ் வழங்கினார்

மன்னார் பிரதேச கலாசார விழா 21-11-2017 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Reviewed by Author
on
November 22, 2017
Rating:

No comments:
Post a Comment