விஜய் வாழ்க்கையை திருப்பிபோட்ட நாள்!
தளபதி விஜய் இன்று தமிழகம் முழுவதும் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு நடிகர். தென்னிந்தியாவில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் விஜய் தான்.
அதற்கு உதாரணம் சமீபத்தில் திரைக்கு வந்த மெர்சலின் வெற்றியையே சொல்லலாம், இந்த நிலையில் விஜய் 2008-2012 வரை தன் திரைப்பயணத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார்.
அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர் தோல்வி படங்களை கொடுத்த இவர் பல வருடங்கள் கழித்து சுதாரித்து காவலன், வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களில் விழித்து எழுந்தார்.
ஆனால், இந்த படங்களும் அவருக்கு பெரிதும் எந்த ஒரு விதத்திலும் பயன் தரவில்லை, விஜய் மார்க்கெட் விழாமல் இருக்க இந்த படங்கள் உதவியது, தன் பழைய மார்க்கெட்டை மீண்டும் புதுப்பிக்க இயக்குனர் முருகதாஸுடன் துப்பாக்கியில் கைக்கோர்த்தார்.
துப்பாக்கி இதே நாள் 5 வருடம் முன்பு திரைக்கு வந்தது, இதுநாள் வரை விஜய்யிடமிருந்து இப்படி ஒரு ஸ்டைலை எந்த ஒரு ரசிகனும் பார்த்தது இல்லை, சின்ன சின்ன விஷ்யங்களில் கூட பல மேனரிசம் காட்டியிருப்பார்.
துப்பாக்கி விஜய் திரைப்பயணம் மட்டுமில்லாமல் மொத்த திரையுலகமே அதிர்ந்து பார்க்கும்படி ஒரு பிரமாண்ட ஹிட் படமாக விஜய்க்கு அமைந்தது, இதை தொடர்ந்து விஜய் திரைப்பயணம் தற்போது வரை உயர்ந்து தான் உள்ளது.
விஜய் வாழ்க்கையை திருப்பிபோட்ட நாள்!
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment