அமெரிக்காவில் கொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற இந்திய மாணவர் சுட்டு கொலை -
அமெரிக்காவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க வந்த நிலையில் அதை தடுக்க முயன்ற இந்திய வம்சாவளி மாணவர் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் சிகாகா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள பெட்ரோல் பங்கில் இந்தியாவின் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அர்ஷத் வோரா (19) என்ற மாணவர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், வோராவிடம் கொள்ளையடிக்க முயன்றனர்.
அதை தடுக்க அவர் முயன்ற நிலையில் கொள்ளையர்கள் மாணவரை சுட்டுக் கொன்றார்கள்.
வோராவுடன் இருந்த அவருடைய உறவினர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 7.80 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற இந்திய மாணவர் சுட்டு கொலை -
Reviewed by Author
on
December 30, 2017
Rating:
Reviewed by Author
on
December 30, 2017
Rating:


No comments:
Post a Comment