ரஜினி பிறந்தநாள் ஸ்பெசல்: காலா படத்தின் 2-வது போஸ்டரை வெளியிட்டார் தனுஷ்
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் வகையில் காலா படத்தின் 2-வது போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை உள்ளிட்ட பல படங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டீல், சுகன்யா, ஈஸ்வரிராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் இரண்டாவது போஸ்டரை நள்ளிரவு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து காலா படத்தின் இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் சரியாக 12 மணிக்கு டுவிட்டரில் வெளியிட்டார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரஜினி பிறந்தநாள் ஸ்பெசல்: காலா படத்தின் 2-வது போஸ்டரை வெளியிட்டார் தனுஷ்
Reviewed by Author
on
December 12, 2017
Rating:

No comments:
Post a Comment