இலங்கைக்கு கடத்த இருந்த ரூ 75 இலட்சம் மதிப்பிலான கேரளா கஞ்சாவை காருடன் பறிமுதல்- ஒருவர் கைது -(video)
ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான கேரள கஞ்சாவை இன்று 11-12-2017பறிமுதல் செய்துள்ள போலீஸார் ஒருவரை கைது செய்து முக்கிய கடத்தல்காரை தேடிவருகின்றனர்
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில் கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோபப்குதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு போலீஸார் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர் அப்போது மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதியை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்த போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் கார் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸார் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்து மண்டபம் காவல்நிலையத்திற்கு கொன்டு சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 75 லட்சம் மதிப்பிலான 85 பார்சல் இருந்த 165 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் தொண்டி பகுதியைச சேர்ந்த அலி என்பவரை கைது செய்து காரில் இருந்து தப்பிச் சென்றவர் யார் எனவும் முக்கிய கடத்தல்காரர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ 75 இலட்சம் மதிப்பிலான கேரளா கஞ்சாவை காருடன் பறிமுதல்- ஒருவர் கைது -(video)
Reviewed by Author
on
December 12, 2017
Rating:

No comments:
Post a Comment