சவுதியில் மூன்று நாளில் 7,706 பேர் கைது ஏன் இந்த நடவடிக்கை...
சவுதியில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய 7,706 பேரை பாதுகாப்பு பொலிசார் மூன்று நாளில் கைது செய்துள்ளனர்.
இதில் 3,212 பேர் சவுதி குடிமகன்கள் மற்றும் 4,494 பேர் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
நடவடிக்கையானது கடந்த 21-லிருந்து 23-ம் திகதி வரை எடுக்கப்பட்டதாக சவுதி ஊடகமான அல்-மடினா செய்தி வெளியிட்டுள்ளது.
அதே போல 434 வாகனங்களை பொலிசார் பிடித்துள்ள நிலையில் அதில் 37 திருடு போன வாகனங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 60 வாகனங்கள் குற்ற செயல்கள் செய்ய பயன்படுத்தபட்டதாகவும், 164 வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதோடு துப்பாக்கி, கத்தி உட்பட 749 ஆயுதங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
348 போதை மருந்து மாத்திரைகள், 1,160 கிராம் கஞ்சா, 218 பாட்டில்கள், 18 ஜெர்ரி கேன்கள் மற்றும் 18 பீப்பாய்கள் ஆகியவற்றையும் கைப்பற்றிய பொலிசார் எல்லவாற்றையும் அழித்துள்ளனர்.
சவுதியில் மூன்று நாளில் 7,706 பேர் கைது ஏன் இந்த நடவடிக்கை...
Reviewed by Author
on
December 28, 2017
Rating:
Reviewed by Author
on
December 28, 2017
Rating:


No comments:
Post a Comment