வயிறு குறைய பயிறு வகையை சேர்ந்த கொள்ளுவில் புட்டு:
ஆரோக்கியம் மிகுந்த இந்த கொள்ளு பயறில் புட்டு செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை எளிதில் கரைக்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 1/2 கப்
- தேங்காய்த் துருவல் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 1
- வெங்காயம் - 1
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- கடுகு - சிறிதளவு
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தயாரிக்கும் முறை
கொள்ளுவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடித்து விட்டு அதை புட்டு மாவு போன்று நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் இட்லி தட்டில் மாவை கொட்டி வேகவைத்து உதிரியாக்கிக் கொண்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதை கொள்ளு மாவில் ஊற்றி நன்றாக கிளறி, தேங்காய் துருவல் கலந்தால், அருமையான கொள்ளு புட்டு தயார்.
கொள்ளு சாப்பிடுவதன் நன்மைகள்
- கொள்ளுவை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோய், ரத்தக்கட்டி ஆகிய பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
- கொள்ளுவில் உள்ல சத்துக்கள் நம் உடலில் தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜனை தடுத்து உயிரணுக்களுக்கு பாதுகாப்பு அளிக்க உதவுகிறது.
- உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலை கொள்ளுவில் இருக்கிறது.
- கொள்ளு தொப்பை மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. எனவே இவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நல்லது.
- சளி மற்றும் கோழை பிரச்சனை உள்ளவர்கள் கொள்ளுவை உணவாக சாப்பிடுவதன் மூலம் சளியை உடலில் இருந்து வெளியேறிவிடும்.
- கொள்ளை வேகவைத்து எடுத்த நீரை குடிப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுவருகிறது.
- பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக கொள்ளு பயன்படுகிறது.

வயிறு குறைய பயிறு வகையை சேர்ந்த கொள்ளுவில் புட்டு:
Reviewed by Author
on
December 12, 2017
Rating:

No comments:
Post a Comment