மன்னாரில் 'புதிய யாப்பு சீர் திருத்தம்' தொடர்பில் விசேட கலந்துரையாடல்-அழைக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் கலந்து கொள்ளவில்லை.(படம்)
'புதிய யாப்பு சீர் திருத்தம்' தொடர்பில் மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் குழுக்களின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(17) காலை மன்னார் சர்வோதயத்தில் இடம் பெற்ற போதும் அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவறும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்ட சர்வோதைய நிலையத்தினால் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற 'யாப்பு சீர்திருத்த முறை' தொடர்பாக மக்களை தெழிவு படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு புதிய யாப்பு சீர்திருத்த காலந்துரையாடல் சர்வோதய தேசோதய பிரிவினூடாக இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் சர்வோதயத்தில் மாவட்ட இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது சர்வோதைய தேசோதய தேசிய இணைப்பாளர் நிஸாந்த பிரித்திராஜ் மற்றும்,சர்வ மத தலைவர்கள்,கிராம மட்ட தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது புதிய யாப்பு சீர் திருத்தம் தொடர்பில் விரிவாக ஆரயப்பட்டதோடு குறித்த யாப்பு சீர் திருத்தம் தொடர்பில் மக்கள் பிரதி நிதிகளிடம் விரிவான விளக்கத்தினையும் மக்களின் கோரிக்கைகளையும் முன் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நேரத்தில் கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத நிலையில் கலந்து கொண்ட மக்கள் குழுக்களின் செயற்பாட்டாளர்கள் தமது கருத்துக்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாட்டுக்குழுவினரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 'புதிய யாப்பு சீர் திருத்தம்' தொடர்பில் விசேட கலந்துரையாடல்-அழைக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் கலந்து கொள்ளவில்லை.(படம்)
Reviewed by Author
on
December 17, 2017
Rating:
No comments:
Post a Comment