வெளிநாடுகளில் சம்பளம் இன்றி வேலை செய்த இலங்கையர்கள் தாயகம் திரும்பினர் -
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று பல வருடங்களாக சம்பளம் கிடைக்காமல் பணிப்புரிந்து வந்த 123 இலங்கையர்களை கடந்த வருடம் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் தலையீட்டின் அடிப்படையில் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சம்பளம் இல்லாது சவூதியில் பணிப்புரிந்த 110 பேர், குவைத்தில் பணிப்புரிந்த 9 பேர், துபாய், கட்டார், ஜோர்தான் நாடுகளில் பணிப்புரிந்த 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதேவேளை வெளிநாடுகளில் தொழில் புரிந்த இடங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக தூதரங்களுக்கு வந்து பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 2,390 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்து இரண்டு இலட்சத்து 12,216 பேர் வெளிநாடுகளுக்கு தொழில்புரிய சென்றுள்ளனர்.
இவர்களில் 56,109 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. அத்துடன் அதிகளவானோர் கட்டார் நாட்டுக்கே சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் சம்பளம் இன்றி வேலை செய்த இலங்கையர்கள் தாயகம் திரும்பினர் -
Reviewed by Author
on
January 10, 2018
Rating:

No comments:
Post a Comment