துரையம்மா அன்பகதின் பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு....
கல்விக்காக உள்வாங்கிய தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகளுக்கு 2018ம் ஆண்டுக்கான கொடுப்பனவு பாடசாலை கற்றல் உபகரணங்கள் 10-01-2018 காலை 9-30 மணியளவில் கத்தாளம் பிட்டி மாதர்சங்கத்தின் வளாகத்தில் வைத்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
துரையம்மா அன்பக நிறுவியவரும் கல்வியால் மாணவச்செல்வங்கள் இவ்வுலகை வெல்லவேண்டும் என்று ஒரே சிந்தனையுடன் முன்பள்ளி முதியோர் இல்லம் தொழி;ல்பேட்டை அமைத்து செயலாற்றவேண்டும் என்ற பெரும் எண்ணம் கொண்டிருந்த அமரர் திரு.வே.மனுவேல்பிள்ளை(உதயன்) அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பெறுமதியான பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் கலந்து கொண்ட அன்பகத்தின் நிர்வாகிகளாள்
- இலுப்பக்கடவை பாடசாலை மாணவர்களுக்கு-13
- கள்ளியடி பாடசாலை மாணவர்கள்-03
பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சுழ்நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் இருக்கின்றபோது இவ்வாறான அமைப்புக்கள் மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்காக தமது பணத்தினையும் நேரத்தினையும் செலவு செய்து இவ்வாறான செயற்பாடுகளை முன்னின்று செய்வது பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதும்.பயனாளி மாணவிகளின் பெற்றோர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

துரையம்மா அன்பகதின் பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு....
Reviewed by Author
on
January 10, 2018
Rating:

No comments:
Post a Comment