குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்: வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பிரபல இயக்குனர் -
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அது பற்றி நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா ''வைரமுத்து தனி மனிதன் அல்ல. இலக்கியத்துக்கும், தமிழுக்கும் அவர் அளித்த தொண்டு சாதாரணமானமா?, இந்த மண்ணோடு கலந்தவர் அவர். அவருக்கு எதிரான போராட்டத்தை தமிழர்களுக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறேன். மதம் எங்களுக்கு ஒரு போதும் கிடையாது. வைரமுத்துவுக்கு ஆதரவாக சினிமாத்துறையில் இருந்து இன்னும் பலமாக குரல் வந்திருக்க வேண்டும். கொல்லைப்புறமாக தமிழகத்துக்குள் வர நினைப்பவர்களின் கனவு பலிக்காது. எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம். எங்களை குற்றப் பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்," என கூறியுள்ளார்.
குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்: வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பிரபல இயக்குனர் -
Reviewed by Author
on
January 19, 2018
Rating:

No comments:
Post a Comment