அண்மைய செய்திகள்

recent
-

சிரியா அரசுப்படைகள் தாக்குதலில் 100 பேர் பலி: அதிர்ச்சி தகவல் -


சிரியாவின் கிழக்கு Ghouta பகுதியில் அரசுப்படைகள் நிகழ்த்திய தாக்குதலில் 100 வரை கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதலில் 470 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தாகுதல்களுக்குள்ளாகும் கிழக்கு Ghouta பகுதியில் சுமார் 400,000 பேர் வாழ்கின்றனர்.

சிரியாவின் தலைநகரான Damascusக்கு அருகிலுள்ள கிழக்கு Ghouta பகுதி தான் எதிர்ப்பாளர்கள் பிடியிலுள்ள கடைசிப்பகுதியாகும்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்த பகுதியை மீட்பதற்காக சிரிய படைகள் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
ஞாயிறன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பொது மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பேக்கரிகள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற இடங்களும் தாக்குதலுக்குள்ளாயின.

திங்களன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன.
அடுத்த மாதம் வந்தால் சிரியாவில் போராட்டங்கள் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன.
இதுவரையான தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், தோராயமாக ஐந்து மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் ராணுவம் தரை வழித்தாக்குதல்களுக்கும் தயாராவதாக நம்பப்படுகிறது.



சிரியா அரசுப்படைகள் தாக்குதலில் 100 பேர் பலி: அதிர்ச்சி தகவல் - Reviewed by Author on February 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.