வங்கதேசத்தை புரட்டியெடுத்த இலங்கை: டி20 தொடரை கைப்பற்றி சாதனை -
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது.
ஏற்கனவே நடைபெற்ற பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தெரிவு செய்தது.
இதையடுத்து துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குணத்திலகவும், குசல் மெண்டீசும் களமிறங்கினார்கள்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் குணத்திலகா 42 ஓட்டங்களில் அவுட்டானார்.
பின்னர் வந்த பெரேரா (31) தரங்கா (25) ஓரளவு நன்றாக ஆடினார்கள். அபாரமாக ஆடிய குசல் மெண்டீஸ் 70 ஓட்டங்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 204 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேசம் ஆரம்பம் முதலே திணறியது.
சர்க்கார் டக் அவுட்டாகி வெளியேற பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் அவுட்டானார்கள்.
இதையடுத்து இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இலங்கை வீரர் குசல் மெண்டீஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது என இரண்டையும் தட்டி சென்றார்.
வங்கதேசத்தை புரட்டியெடுத்த இலங்கை: டி20 தொடரை கைப்பற்றி சாதனை -
Reviewed by Author
on
February 20, 2018
Rating:
No comments:
Post a Comment