வெளிநாட்டில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை! 22 வயதான இளைஞர் கைது -
இலங்கை பணிப்பெண் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக 22 வயதான இளைஞர் ஒருவரை எகிப்த் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
54 வயதான இலங்கை நாட்டு பணிப் பெண் ஒருவரே இவ்வாறு படுககொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் சாரதி தொழில் செய்து வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடந்தும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“படுகொலை செய்யப்பட்ட பெண்ணும், கைது செய்யப்பட்ட இளைஞரும் ஒரே வீட்டில் பணியாற்றி வந்துள்ளனர். இதன் போது இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் இலங்கைக்கு வந்து திருமணம் செய்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளனர். இதற்காக இலங்கை பெண் வீட்டாரிடம் சம்மதம் கேட்ட போதும், அதற்கு வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண்ணை அந்த இளைஞர் வெறுக்க ஆரம்பித்துள்ளதுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதற்கும் தீர்மானித்துள்ளார்.
எனினும் குறித்த இலங்கைப் பெண் அவரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, குறித்த இலங்கை பணிப் பெண்னை கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 22 வயதான இளைஞர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை! 22 வயதான இளைஞர் கைது -
Reviewed by Author
on
February 27, 2018
Rating:

No comments:
Post a Comment