ஆந்திர ஏரியில் சடலமாக மிதந்த 7 தமிழர்கள்: நடந்தது என்ன? -
இந்தியாவின் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒண்டமிட்டா ஏரியில், 7 நபர்களின் உடல் சடலமாக மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆந்திர பொலிசார், உடல்களை மீட்டு விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், சடலமாக மிதந்த 7 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திரா சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ஆந்திர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர ஏரியில் சடலமாக மிதந்த 7 தமிழர்கள்: நடந்தது என்ன? -
Reviewed by Author
on
February 19, 2018
Rating:
No comments:
Post a Comment