கின்னஸ் சாதனையை நிறைவு செய்த இலங்கை இளைஞன்! -
இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கின்னஸ் சாதனை ஒன்றை நிறைவு செய்துள்ளார்.
எவ்வித உதவியுமின்றி மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டே மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சாதனை செய்துள்ளார்.
இவர் அனுராதபுரத்தில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த கின்னஸ் சாதனை முயற்சியை நிறைவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 100 கிலோ மீற்றர் தூரம் பயணித்த இந்த இளைஞர் 23 வயதுடையவராகும்.
கொக்கரெல்ல, பொல்கொல்ல, ஆர்.எம்.தரிந்து இஷார அக்கலங்க மெட்டிகும்புரே என்பவரினால் இந்த சாதனை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி காலை 10.26 மணிக்கு அனுராதபுரம் இரண்டாம் மைல்கல் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம் குருணாகல், சாரகம ஏரிக்கு அருகில் நிறைவடைந்துள்ளது.
சாதனை குறித்து தரிந்து கருத்து வெளியிடுகையில்,
“சிறு வயது முதல் மோட்டார் சைக்கிளில் பயணிக்க அதிக ஆர்வம் இருந்தது. ஒரு நாள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பொலிஸார் கைது செய்தனர்.
அன்று தான் இவ்வாறான சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பொலிஸாருக்கு மிக்க நன்றி. அதனாலேயே இன்று இவ்வாறான சாதனையை நிகழ்த்த முடிந்தது... என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனையை நிறைவு செய்த இலங்கை இளைஞன்! -
Reviewed by Author
on
February 19, 2018
Rating:

No comments:
Post a Comment