ஜேர்மனியில் 83 வருடப் பழமையான ஹிட்லர் மணியை அகற்ற எதிர்ப்பு -
தென் மேற்கு ஜேர்மனியிலுள்ள 700 பேரைக் கொண்ட நகரமான Herxheim am Bergஇலுள்ள மக்கள் அந்த ஆலய மணியை அகற்றுவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
Church of St. Jacob என்னும் ஆயிரம் வருட பழமை வாய்ந்த ஆலயத்திலுள்ள அந்த மணியில் ஒரு ஸ்வஸ்திக் உருவமும் "Everything for the Fatherland — Adolf Hitler."என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் கிடந்த அந்த மணியைக் குறித்து அந்த ஆலயத்தின் organist புகாரளித்ததையடுத்து அந்த மணி பலரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தது.
ஒரு பெண் “ஹிட்லரின் சாதனைகளுக்காக அவர் நினைவு கூறப்படவேண்டும்” என்று கூறியதாக ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியதையடுத்து அந்த நகரின் மேயர் Roland Becker ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
அந்த மணியை அகற்றக் கூடாது என்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் தற்போதைய மேயரான Georg Welker, அந்த மணி மீண்டும் ஒலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அது யூதர்கள் மற்றும் யூதரல்லாதவர்களின் துயரங்களை ஒலிக்கும் என்று கூறியுள்ளார்.
திங்கள் இரவு வாக்கெடுப்பிற்கு முன் ஒரு வரலாற்றியல் வல்லுனர் அளித்த அறிக்கை ஒன்றில், அந்த மணி ஒரு நினைவுச் சின்னம் என்றும் அதில் எந்த மாற்றங்களும்கூட செய்யப்படக்கூடாது என்றும் வேண்டுமென்றால் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுகூறும் வகையில் ஒரு நினைவுத்தூணை எழுப்பி அதில் இந்த மணியைத் தொங்க விடலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள Central Council of Jews in Germany என்னும் அமைப்பின் தலைவரான Josef Schuster கூறும்போது ”ஹிட்லரின் நினைவாக தொங்க விடப்பட்ட அந்த மணி மீண்டும் பிரார்த்தனைக்காக ஒலிக்க வேண்டும் என்றால் என்னைப்பொருத்தவரையில் அது நினைவுத்தூணோ இல்லையோ அது மூன்றாம் உலகையும் ஹிட்லர் என்னும் மனிதனையும் பெருமைப்படுத்துதலை தொடர்ந்து நினைவு படுத்தும் ஒரு விடயமாகவே இருக்கும் என்கிறார்.
ஜேர்மனியில் 83 வருடப் பழமையான ஹிட்லர் மணியை அகற்ற எதிர்ப்பு -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:
No comments:
Post a Comment