அண்மைய செய்திகள்

recent
-

உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த கனடா வாழ் இலங்கைத் தமிழன் -


உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.
ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவர் 6 சர்வதேச போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை தான் ஒரு போதும் கற்பனை செய்து பார்த்ததில்லை என மார்கஸ் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.
வெதுப்பக ஒலிம்பிக் போட்டியாக தான் இதனை கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டியில் பங்குபற்றுவதாக மார்கஸ் மரியதாஸ் பிரான்ஸ் தலைநகரான பரிஸிற்கு கடந்த வாரம் சென்றிருந்தார்.
அதற்கமைய உலகின் மிக பிரபலமான சர்வதேச போட்டியாளர்கள் 6 பேருடன் இணைந்து ஊட்டச்சத்து பாண் தாயாரிக்கும் போட்டி பிரிவில் அவர் பங்கு பற்றியுள்ளார். வட அமெரிக்கர்கள் மட்டுமே இந்த பிரிவில் பங்குபற்றியுள்ளனர்.

வெதுப்பகர்களின் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை அடைவது போல, இது என்னுடைய சாதனைகளின் உச்சத்தில் இருக்கிறது, தற்போது 46 வயதான நான் எனது 25 வயதில் இருந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டி ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒரு முறையும் இடம்பெறுகின்றது. உலகின் மிகசிறந்த 18 சர்வதேச போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
பாரம்பரிய ஐரோப்பிய முறைகளில் தனது நிபுணத்துவத்தை கொண்டு அவர் இந்த போட்டியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக 1995 ஆம் ஆண்டு மரியதாஸ் கனடா சென்றார். அங்கு டொரொன்டோவில் வாழ்ந்து வருகிறார்.

கணக்கியல் படிக்கும் போது, அவர் ACE வெதுப்பகத்தில் பகுதி நேர வேலையில் இணைந்தார். மரியதாஸிற்கு வெதுப்பக தொழில் அனுபவம் இல்லாத போதிலும், எண்களை கையாளக்கூடிய திறன் அவரிடம் காணப்பட்டது. வெதுப்பகத்தில் அவரின் திடமான செயற்பாடுகள் காரணமாக சிரேஷ்ட இயக்குநராக தரமுயர்ந்தார். அதன் பின்னர் வெற்றிகரமாக பணியை முன்னெடுத்தவர் 400க்கும் அதிகமான பாண்களை தயாரித்தார்.
தற்போது உலகின் தலை சிறந்த பேக்கர் போட்டியின் இறுதி போட்டியில் அவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த கனடா வாழ் இலங்கைத் தமிழன் - Reviewed by Author on February 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.