அண்மைய செய்திகள்

recent
-

நித்தியானந்தாவை பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: நீதிமன்றம் -


நித்தியானந்தாவை எந்த வழக்கில் இருந்தும் விடுவிக்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆரத்திராவ் என்ற பெண்ணை நித்தியானந்தா பலாத்காரம் செய்ததாக நித்தியானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இவ்வழக்கில் லெனின் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பலாத்காரம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நித்தியானந்தா, 5 வயது தன்மையுடன் இருப்பதாகவும், எனவே தன்னை பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மருத்துவ சான்றுடன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பலாத்கார வழக்கு மட்டுமல்ல எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை விடுவிக்க முடியாது என, நித்தியானந்தா உட்பட 5 பேரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் பிப்ரவரி 28ஆம் திகதி முதல் நித்தியானந்தா மீதான வழக்குகளில் விசாரணை நடத்தப்படும் என்றும் ராம்நகர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நித்தியானந்தாவை பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: நீதிமன்றம் - Reviewed by Author on February 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.