அதிகரித்த வருவாய்: குடிமக்களுக்கு போனஸ் வழங்கும் அரசு -
சிங்கப்பூரில் 9.61 பில்லியன் டொலருக்கு வருவாய் உபரியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 21 வயதை கடந்த குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு போனஸ் வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி ஆண்டு வருவாய் 28,000 சிங்கப்பூர் டொலர் வரை ஈட்டும் குடிமக்களுக்கு இந்த ஆண்டு 300 டொலர் போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
28,000 சிங்கப்பூர் டொலரில் இருந்து 100,000 டொலர் வரை ஈட்டும் குடிமக்களுக்கு போனஸாக 200 டொலரும், அதற்கு மேல் வருவாய் ஈட்டும் குடிமக்களுக்கு 100 டொலரும் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
குறித்த போனஸ் தொகையானது இந்த ஆண்டு இறுதியில் ஒவ்வொரு குடிமக்களின் வங்கிக்கணக்கிலும் வரவு வைக்கப்பட்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் Heng Swee Keat நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அரசுக்கு சுமார் 9.61 பில்லியன் சிங்கப்பூர் டொலர் உபரி வருவாய் உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்தே போனஸ் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் 700 மில்லியன் சிங்கப்பூர் டொலர் அரசுக்கு செலவாகும் என கூறப்படுகிறது.
உபரி பட்ஜெட் என்பது செலவுகளை விட வருவாய் அதிகம் இருக்கும் பட்ஜெட் ஆகும்.
ஆனால் சிங்கப்பூர் அரசு குடிமக்களுக்கு இதுபோன்று போனஸ் வழங்குவது இது முதன் முறையல்ல. கடந்த 2011 ஆம் ஆண்டு இதே போன்று உபரி பட்ஜெட் தாக்கல் செய்ததால், குடிமக்களுக்கு 800 டொலர் வரை போனஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த வருவாய்: குடிமக்களுக்கு போனஸ் வழங்கும் அரசு -
Reviewed by Author
on
February 20, 2018
Rating:

No comments:
Post a Comment