சிரியாவின் ரசாயன தாக்குதல் பின்னணியில் வடகொரியா? வெளியான பகீர் தகவல்
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் ஆசாத் அரசு படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது.
அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் நாள் தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். பிஞ்சு குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட ஆதரவற்ற மக்களே பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மட்டுமின்றி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு சிரியா அரசு படைகள் ரசாயன ஆயுதங்களை பெருமளவு பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதன் பின்னணியில் இதுவரை ரஷ்யாவின் பங்களிப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது வடகொரியாவின் பங்களிப்பு தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சுமார் 40 முறை ரசாயன ஆயுதங்கள் தொடர்பான கருவிகள் மற்றும் உதவிகளை வடகொரிய அரசு சிரியாவுக்கு அளித்துள்ளது.
மட்டுமின்றி வடகொரியாவின் மிக்கிய விஞ்ஞானி ஒருவர் சிரியாவின் ஆயுதம் தயாரிக்கும் கூடங்களில் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் குறித்த தகவல்களை இரு நாடுகளும் மறுத்துள்ளது.
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் இருந்தும், அந்த நாடு கள்ளத்தனமாக சிரியாவுக்கு உதவி உள்ளது.
2013ஆம் ஆண்டில் சிரியாவின் அனைத்து விதமான ரசாயன குண்டுகளும் அழிக்கப்பட்டது. அதன்பின்னர் கள்ளத்தனமாக வடகொரியாவின் உதவியுடன் புதிதாக ரசாயன குண்டுகளை சிரியா தயார் செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த ரசாயன குண்டுகளில் காணப்படும் பல முக்கியமான வேதிப்பொருட்கள் வடகொரியா குண்டுகளால் காணப்படுவதாக கூறப்படுகிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவின் ரசாயன தாக்குதல் பின்னணியில் வடகொரியா? வெளியான பகீர் தகவல்
Reviewed by Author
on
February 28, 2018
Rating:
No comments:
Post a Comment