மலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு -
பிளாஸ்மோடியம் பஸிலிஃபாரம் எனப்படும் உயிர்கொல்லி ஒட்டுண்ணியே இம் மருந்தினால் கொல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளரான Pradip Paik தலைமையிலான குழுவே இச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இம் மருந்து பொலிமரை அடிப்படையாகக் கொண்ட நனோ மருந்தாக உருவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் கலங்கள் வரை சென்று குறித்த ஒட்டுண்ணியை அழிக்கும் ஆற்றலை இம் மருந்து கொண்டுள்ளது.
இதேவேளை ஆண்டுதோறும் 212 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுவதுடன், 4,29,000 பேர் ஆண்டுதோறும் மலேரியாவினால் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment