குறைந்த போட்டியில் 100 விக்கெட்: உலக சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர்
19 வயதான ரஷித் கான், ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில், ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
ஆனால், ரஷித் கான் 44 போட்டிகளிலேயே 100 விக்கெட் வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரஷித் கான் 2வது இடத்திலும், டி20 தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த போட்டியில் 100 விக்கெட்: உலக சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர்
Reviewed by Author
on
March 26, 2018
Rating:
No comments:
Post a Comment