முகம் தெரியாத ஒருவருக்கு விஜய் சேதுபதி செய்த மிகப்பெரும் உதவி -
விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட.
இந்நிலையில் விஜய் சேதுபதி மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார், அதனால், கஷ்டப்படுபவர்களை அவரே கை கொடுத்து தூக்கி வருகின்றார்.
எப்போதும் நண்பர்களுக்கும், நமக்கு தெரிந்தவர்களுக்கும் தான் உதவ முன் வருவோம், ஆனால், தனக்கு யார் என்றே தெரியாத ஒரு புகைப்பட கலைஞருக்கு விஜய் சேதுபதி உதவியுள்ளார்.
ஆம், ஒரு புகைப்பட கலைஞரின் மருத்துவ சிகிச்சை ஒன்றிற்கு விஜய் சேதுபதி பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இதை அவர் எந்த இடத்திலும் கூறியது இல்லை, சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் இதை தெரிந்துக்கொண்ட இந்த கேள்வியை விஜய் சேதுபதியிடம் கேட்க, அதற்கு அவர் பதில் கூட சொல்லாமல் இதை பற்றியெல்லாம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்.
முகம் தெரியாத ஒருவருக்கு விஜய் சேதுபதி செய்த மிகப்பெரும் உதவி -
Reviewed by Author
on
March 26, 2018
Rating:

No comments:
Post a Comment