ஜேர்மனியில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: அகதிகளின் வெறிச்செயல் -
ஜேர்மனியின் ஹனோவர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு இரண்டு பெண்கள்(24,25 வயது) சென்றபோது, அங்கிருந்த இரு சிரிய அகதிகளுக்கும்(வயது 13,14) இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததையடுத்து இரு தரப்பினரும் பிரிந்து சென்றுள்ளனர். ஆனால், அகதிகள் இருவரும் 17 வயதுடைய மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு குறித்த பெண்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், 24 வயதுடைய பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தீவிரமாக தேடி மறைந்திருந்த அகதிகளை கைது செய்துள்ளனர்.
அதில் இருவர் மீது மட்டும் கொலை முயற்சியின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், 13 வயதுடைய நபரை விடுவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான குறித்த பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் சாலையில் இறங்கி நடப்பதற்கே அச்சமாக இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் கோபமுடன் தெரிவித்து வருகின்றனர்.
ஜேர்மனியில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: அகதிகளின் வெறிச்செயல் -
![]() Reviewed by Author
        on 
        
March 27, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 27, 2018
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment