ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு -
11வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் ஏப்ரல் 7ஆம் திகதி தொடங்க உள்ளது. மும்பையில் நடைபெற முதல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாட உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏப்ரல் 10ஆம் திகதி சென்னை அணி சந்திக்க உள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை விவரம் வெளியாகி உள்ளது.
Stadium-யில் உள்ள Ticket counter-களில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் குறைந்தபட்ச விலை ரூ.1,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச விலையாக ரு.6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5,000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளன.
அத்துடன், ஒன்லைனிலும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் விற்பனை தொடக்கம் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு -
Reviewed by Author
on
March 31, 2018
Rating:
Reviewed by Author
on
March 31, 2018
Rating:


No comments:
Post a Comment