சிறுநீர் நுரையாக வருகிறதா? அப்போ இந்த பிரச்னையாக இருக்கலாம் -
நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அறிகுறிகள் பொதுவானதாக இருப்பதால், இவை பெரும்பாலும் கவனிக்காமல் விடப்படுகின்றன.
சோர்வாக உணர்வது
ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.
சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது, இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. இதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வடைகிறது.
சுவாசப் பிரச்சினைகள்
சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இரண்டு விதத்தில் சம்பந்தப்படுகிறது. உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் இருப்பதால் அவை நுரையீரலில் சென்று சேர்கிறது.
மற்றொன்று, ரத்தசோகை ஏற்படுவதால் உடல் பிராண வாயுவிற்காக தவித்து மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது.
தலைசுற்றல் மற்றும் சோர்வு
சிறுநீரக செயலிழப்பு தொடர்பான அனீமியா என்பது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று பொருள். இதனால் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு போன்றவை உண்டாகலாம்.
வீக்கம்
உங்கள் கைகளில் அல்லது கால் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், சிறுநீரக செயலிழப்பும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
செயலிழந்த சிறுநீரகத்தால் உடலில் உள்ள திரவத்தை வெளியேற்ற முடியாமல், அவை உடலில் தங்கி கை, கால், பாதங்களில் வீக்கம் உண்டாகலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் உங்களுக்கு சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீர் வெளியேறும்போது ஒரு வித சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
சிறுநீரில் நுரை
சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும்.
சிறுநீரில் அளவுக்கு அதிகமான புரதம் இருந்தாலும் இப்படி நுரை அதிகமான சிறுநீர் வெளியேறும்.
சிறுநீர் நுரையாக வருகிறதா? அப்போ இந்த பிரச்னையாக இருக்கலாம் -
Reviewed by Author
on
March 28, 2018
Rating:
Reviewed by Author
on
March 28, 2018
Rating:


No comments:
Post a Comment