11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ராபேல் நடால் -
மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முதல் நிலை வீரரான ஸ்பெனின் ரபேல் நடாலும், ஜப்பானின் கெய் நிஷிகோரியும் தகுதி பெற்றனர்.
இறுதிப்போட்டியில் ரபேல் நடால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய நடால் அந்த செட்டையும் 6-2 என கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வெல்வது இது 11வது முறையாகும்.
11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ராபேல் நடால் -
Reviewed by Author
on
April 23, 2018
Rating:

No comments:
Post a Comment