சுவிஸ் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி:
சுவிட்சர்லாந்தில் நடப்பு ஆண்டில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கையானது அரசு அதிகாரபூர்வ தகவல்படி 7,098 ஆகும்.
இது கடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களை ஒப்பிடுகையில் 3,080 எண்ணிக்கை குறைவு என தெரிய வந்துள்ளது.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதற்கான உறுதியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இது இறுதியானது அல்ல எனவும், மிக குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு துவக்கத்தில், சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற தேவையான வழிமுறைகளில் அரசு மாற்றம் செய்தது.
அதில் முக்கியமாக மொழியை முன்னிலைப்படுத்தியது. ஆனால் அதன் தாக்கம் இதுவரை வெளிப்படையாக அறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி என்பது சுவிட்சர்லாந்தில் மட்டுமல்ல, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதில் முக்கியமாக வீழ்ச்சியை சந்தித்துள்ள நாடுகள், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் என தெரிய வந்துள்ளது.
மேலும், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டில் வேலை வாய்ப்பு மிகுதியாக காணப்படுவதால் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்திருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.
சுவிஸ் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி:
Reviewed by Author
on
April 30, 2018
Rating:

No comments:
Post a Comment