ரஜினி, கமல் பட இயக்குனர் திடீர் மரணம் - சினிமா துறையினர் அதிர்ச்சி
சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியுள்ள பழம்பெரும் இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் இன்று காலமானார். அவரின் திடீர் மறைவு சினிமா துறையில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தை இயக்கியதும் இவர்தான். இயக்குவது மட்டுமின்றி இவர் பல படங்களை தயாரித்தும் உள்ளார். கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தை தயாரித்தவர் இவர்தான். 65 படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றுள்ளார்.
என்பது கூடுதல் சிறப்பு. 88 வயதான அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை தி-நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
ரஜினி, கமல் பட இயக்குனர் திடீர் மரணம் - சினிமா துறையினர் அதிர்ச்சி
Reviewed by Author
on
May 30, 2018
Rating:

No comments:
Post a Comment