விவர அறிக்கையில் குழப்பம்: துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே இல்லை ஸ்டாலின் கேள்வி -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விவர அறிக்கையை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த அறிக்கையில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும், துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே விவர அறிக்கையில் இடம் பெறவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசாணை மட்டும் வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்தால் நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகவும், அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவாக வரையறை செய்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போது தமிழக அரசின் செயல்பாடு அனைத்தும் கண்துடைப்பு மட்டுமே என்றும் ஆலை நிர்வாகிகளிடம் பேரம் பேசவே இவ்வாறு ஆட்சியாளர்கள் நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
விவர அறிக்கையில் குழப்பம்: துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே இல்லை ஸ்டாலின் கேள்வி -
Reviewed by Author
on
May 30, 2018
Rating:
No comments:
Post a Comment