உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டிற்கு இத்தனை கோடி ரசிகர்களா....
ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆய்வு 12 முழு உறுப்பு கிரிக்கெட் நாடுகள், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
சீனாவும் அமெரிக்காவும் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் 100-கோடிக்கும் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பதாகவும். 300 மில்லியன் பங்கேற்பாளர்கள், 39 சதவீதம் பேர் ரசிகைகள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஐசிசி நடத்தும் தொடர்களுக்கே அதிகளவில் வரவேற்பு இருப்பதாகவும், 95 சதவீத ரசிகர்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கிண்ணம் மற்றும் டி20 உலகக்கிண்ணம் தொடரில் பெரிதும் ஆர்வம் காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
87 சதவீத கிரிக்கெட் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தேவை என்று கூறியுள்ளனர்.
கிரிக்கெட் அல்லாத ரசிகர்கள் கேட்ட போது கிரிக்கெட்டை இன்னும் எளிமையாக நடத்துங்கள், கிரிக்கெட் போட்டி அட்டவணைகளை இன்னும் எளிதாக்குங்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும் எப்போதும் கால்பந்திற்கே உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் கால்பந்திற்கு மட்டும் சுமார் 350 கோடி பேர் ரசிகராக இருப்பது தெரியவந்தது.
உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டிற்கு இத்தனை கோடி ரசிகர்களா....
Reviewed by Author
on
June 28, 2018
Rating:

No comments:
Post a Comment