முல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபா செலவில் புதிய பேருத்து நிலையம் -
முல்லைத்தீவு நகரில் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய பேருத்து நிலையத்துக்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் இன்று காலை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ. கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரன், கரைத்துறைப்பற்று, மாந்தை கிழக்கு பிரதேச சபை தலைவர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்களென பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, கம்பெரலிய விசேட வேலைத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா 200 மில்லியன் பொறுமதியான முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகளும் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபா செலவில் புதிய பேருத்து நிலையம் -
Reviewed by Author
on
July 22, 2018
Rating:

No comments:
Post a Comment