எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள்! சி.வி. விக்னேஸ்வரன் ஆதங்கம் -
எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக் கொண்டு எம்மை விலை கொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று சந்தித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
உங்களுடைய நிலங்களை பெற்றுத்தர வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் எப்படியாவது உங்களுடைய காணிகளை திருப்பி தரக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
இந்நிலையில் இதுவரையில் எமக்கு வெற்றி கிட்டவில்லை. ஆனால் உங்களுடைய பிரச்சினையை உலகறிய செய்திருக்கின்றோம். திரும்பவும் உங்களுடைய காணிக்குள் நீங்கள் பலாத்காரமாக போவதற்கு தீர்மானித்துள்ளீர்கள்.
இது சம்பந்தமாக எல்லோருடனும் பேசி ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதாக கூறித்தான் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்வதால் இராணுவம் எந்தவிதமான நடவடிக்கையை எடுப்பார்கள் என கூற முடியாது.
விரைவிலே உங்களின் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
இந்த பிரச்சினைகளை பார்த்தால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு காலாகாலம் இருக்கும் பிரச்சினைகள் போலத்தான் இதுவும் தர வேண்டிய காணிகளை விடுவிக்காமல் வைத்துக்கொண்டு அதை எடுங்கள் இதை எடுங்கள் என்றுதான் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்
தவிர எமக்கு தேவையான எமக்கு உரித்துடைய எமது பழம்பெரும் காணிகளை நாம் பலகாலமாக பாதுகாத்து வந்த காணிகளை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கின்றார்கள்.
இதேபோலத்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை காலாகாலம் தீர்த்து வைக்காது அவர்களுடைய அரசியல் ரீதியான உரிமைகளை தீர்வுகளை பெற்றுக் கொடுக்காது அதைத் தருகின்றோம் இதைத் தருகின்றோம் கொஞ்சம் குறைத்து தருகின்றோம் என்று பேரம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
உங்களுக்கு தர வேண்டிய காணிகளை பிடுத்து வைத்துக் கொண்டு தராது மறுக்கின்றார்கள். அதேபோலத்தான் வடக்கு கிழக்கு ஆயிரமாயிரம் வருடங்களாக தமிழ் மக்களுடையது அந்த நிலங்களை பறித்து வைத்துக் கொண்டு அது சம்பந்தமான உரிமைகளை பறித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி எம்மை பணம் கொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்.
உங்கள் உரித்துக்களை நீங்கள் விட்டுக் கொடுக்காது போராடி வருகின்றீர்கள். அதை நாம் வரவேற்கின்றோம். அதேபோலத்தான் தமிழ் மக்களும் தமது உரித்துகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த உரித்துக்கள் கிடைக்கும் வரை நாம் குரல் கொடுத்து கொண்டிருப்போம்” என தெரிவித்தார்.
எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள்! சி.வி. விக்னேஸ்வரன் ஆதங்கம் -
Reviewed by Author
on
July 21, 2018
Rating:

No comments:
Post a Comment