கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வாகனத்தில் மோதி 5 பிள்ளைகளின் தந்தை பலி!
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதனால் சிலமணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கிளிநொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் டக் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வாகனத்தில் மோதி 5 பிள்ளைகளின் தந்தை பலி!
Reviewed by Author
on
August 16, 2018
Rating:

No comments:
Post a Comment