மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் திடீர் இடமாற்றம்-(படம்)
மன்னார் மாவட்ட நீதவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வளங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நேற்று புதன் கிழமை 29-08-2018 மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இட மாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இன்றைய தினம் 30-08-2018 கொழும்பில் தனது கடமையை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என தெரிய வந்துள்ளது.
-மன்னார் மாவட்ட நீதவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்கு விசாரனைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
-மேலும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து தனது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்கு விசாரனைகளை கடுமையாக விசாரனைகளை மேற்கொண்டு வந்தமை மற்றும், நீதவானுக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் போன்ற வற்றின் காரணமாகவே மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் திடீர் இடமாற்றம்-(படம்)
Reviewed by Author
on
August 30, 2018
Rating:

No comments:
Post a Comment