18 பேர் பலி.. 70 பேர் படுகாயம் - கல்லூரி வளாகத்தில் புகுந்து மாணவன் துப்பாக்கிச் சூடு:
கிரிமியாவில் கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர் 18 வயதேயான Vladislav Roslyakov என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது உடல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.
15 நிமிடங்கள் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பின்னர் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்குள்ள ஆசிரியர்கள் மீது கடும் வெறுப்பில் இருந்ததாகவும், தகுந்த நேரத்தில் பழிவாங்குவதாகவும் குறித்த இளைஞர் தெரிவித்திருந்ததாக அவரது நண்பர் ஒருவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



18 பேர் பலி.. 70 பேர் படுகாயம் - கல்லூரி வளாகத்தில் புகுந்து மாணவன் துப்பாக்கிச் சூடு:
Reviewed by Author
on
October 18, 2018
Rating:
No comments:
Post a Comment