சென்னையிலிருந்து கொழும்பை தாக்க விடுதலைப்புலிகள் திட்டம்! இந்தியாவின் முக்கிய கருத்து -
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் சென்னையில் இருந்து விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதல்களை நடத்தவிருந்தனர் என்ற செய்தியை இந்திய தரப்புக்கள் நிராகரித்துள்ளன.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவில் வைத்து இந்த தகவலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு தாம் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போது விடுதலைப்புலிகள் சென்னையில் காடுகளில் இருந்து விமானங்களின் மூலம் கொழும்பில் தாக்குதல்களை நடத்தவிருந்ததாக ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் தமிழகத்தில் 2009ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை தலைவர்களில் ஒருவரான டிஆர் பாலு இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி போரின் போது சென்னை விமான நிலையம் கியூ பிரிவு காவல்துறையினரின் முழு பாதுகாப்பில் இருந்தது.
எனவே விடுதலைப்புலிகள் அங்கிருந்து தாக்குதல்களை நடத்த வாய்ப்பிருக்கவில்லை என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கேர்னல் ஆர்.ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான ஆய்வாளர் சூரியநாராயனாவும் இந்த கருத்துக்கு இணையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னையிலிருந்து கொழும்பை தாக்க விடுதலைப்புலிகள் திட்டம்! இந்தியாவின் முக்கிய கருத்து -
Reviewed by Author
on
October 01, 2018
Rating:
Reviewed by Author
on
October 01, 2018
Rating:


No comments:
Post a Comment