கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு -
அடுத்த வருடத்தில் தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் ஆவணங்களில் பதிவுசெய்யும்போது மாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அருகிலுள்ள பாடசாலைகளில் நேர்முகப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் புள்ளிகளிலேயே இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, எந்தவொரு மாணவரின் புள்ளிகளிலும் மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுமாயின் தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோரிடம் கல்வியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இவை தொடர்பாக சகல பாடசாலைகளுக்கும் சுற்றரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு -
Reviewed by Author
on
October 25, 2018
Rating:

No comments:
Post a Comment