அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு -
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று சுயாதீன இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாவட்ட செயலகம் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை சென்றடைந்த இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் பிரதிநிதியிடம் இந்த மகஜரை கையளித்துள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சியில் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு -
Reviewed by Author
on
October 02, 2018
Rating:

No comments:
Post a Comment