2019 உலகக்கோப்பைக்கு இதே இந்திய அணி தான் விளையாடும்: ரவிசாஸ்திரியால் டோனி ரசிகர்கள் மகிழ்ச்சி -
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் தொடராக டி20 போட்டி வரும் 21-ஆம் திகதி துவங்கவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி, ஒரு தனி துடுப்பாட்ட வீரர் என்றில்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து எப்படி நன்றாக துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
வேகப்பந்து வீச்சு நன்றாக உள்ளது. நீண்ட நாட்களாக அவர்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்தி திறமையை பெற்றிருக்கிறார்கள்

நாம் இங்கிலாந்து சென்ற போது, லார்ட்ஸ் டெஸ்டை தவிர்த்து, மற்ற டெஸ்டில் வெற்றியை நெருங்கி வந்து அறுவடை செய்ய முடியாமல் போனது.
தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பாட்டத்தை கொடுத்தோம். ஆனால், ஒரு அணியான நாம் துடுப்பெடுத்தாடவில்லை என்றால் கிழே விழுந்து தோல்வியடைந்து விடுவோம்.
மேலும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வீரர்களே கிட்டத்தட்ட அடுத்து நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் விளையாடலாம் என்றும் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒருநாள் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்படுவதால், நிச்சயம் டோனி அடுத்த உலக்கோப்பைக்கு விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏனெனில் டோனி உலகக்கோப்பை விளையாடுவது குறித்து பல வதந்திகள் கிளம்பி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரவிசாஸ்திரி பேசியுள்ளார் என்றே கூறலாம்.
2019 உலகக்கோப்பைக்கு இதே இந்திய அணி தான் விளையாடும்: ரவிசாஸ்திரியால் டோனி ரசிகர்கள் மகிழ்ச்சி -
Reviewed by Author
on
November 18, 2018
Rating:
No comments:
Post a Comment