கண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்!
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
கொய்யா பழத்தை எப்படி சாப்பிடலாம்?
- கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் இவை கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது.
- நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு ஆகியவை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.
- கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தை சேர்த்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறுவதுடன், ரத்தம் சுத்தமாகும்.
- மதிய உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல், வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரகக் கோளாறு ஆகியவை குணமாகும்.
- கொய்யா பழத்தில் நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரையும் உள்ளது. எனவே தினம் ஒரு கொய்யாவை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும்.
- கொய்யாவின் இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து அதை குடித்து வந்தால், வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.
கொய்யபழத்தின் நன்மைகள்
- கொய்யப்பழத்தில் உள்ள கேலிக் அமிலம், கேதெச்சின், எபிகேதெச்சின் ஆகியவை உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
- கொய்யப்பழத்தில் உள்ள .குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்பட்டு சர்க்கரை நோய் வரமால் தடுக்கின்றது.
- கொய்யா இலைகளில் உள்ல க்யுர்செட்டின்,லைகோபென் மற்றும் விட்டமின் சி ஆகியவை புற்றுநோய் செல்கள் வளராமல் தடுத்து நம் செல்களுக்கு பாதுகாப்பு அளித்திடும்.
- கொய்யாப் பழம் வைட்டமின் சி க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்த கொய்யாப் பழம் அடிக்கடி சாப்பிட வேண்டும்.
- கொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினைமேம்படுத்தி உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது.
- முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கி பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
கண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்!
Reviewed by Author
on
November 18, 2018
Rating:

No comments:
Post a Comment