மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவேந்தல் அனுஸ்ரிப்பு-(படம்)
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் 'மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு' இன்று செவ்வாய்க்கிழமை(27) மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.மூன்று மாவீரர்களின் தந்தையான கந்தையா வைரமுத்து என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுத்திக்கப்பட்ட யுத்தம் நிறைவடைந்த போது 2009 ஆம் ஆண்டு மன்னார் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு உடைத்து சேதமாக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உடைக்கப்பட்ட கல்லறைகள் , கற்கைள் ஆங்காங்கே சிதறி காணப்பட்ட போது இதனை ஓரிடத்தில் குவித்த மாவீர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
November 27, 2018
Rating:
No comments:
Post a Comment