அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு கல்வி வலய பெண்கள் அணி வலைப்பந்தாட்ட சம்பியனாக தெரிவு -


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலய அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிக்கு இணைவாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெபர் விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் இன்று நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் ஈஸ்பரன் தலைமையில் ஆரம்பமான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த சுற்றுப்போட்டியில் பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகம், கல்வித் திணைக்களம், பிரதேச செயலகம் உட்பட எட்டு திணைக்களங்களில் இருந்து எட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

இந்த சுற்றுப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக அணியும் மோதிக்கப்பட்டது.
இதனடிப்படையில் 21-06 என்ற புள்ளியடிப்படையில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக அணி வெற்றிபெற்று சம்பியனாகியது.
முன்னெடுக்கப்புடும் விளையாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து எதிர்வரும் 22ஆம் திகதி மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலய பெண்கள் அணி வலைப்பந்தாட்ட சம்பியனாக தெரிவு - Reviewed by Author on November 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.