அண்மைய செய்திகள்

recent
-

எனது தேசம்......................சிறுகதை


எனது தேசம்......................

நீண்ட நாட்களுக்கு பின்பு பெய்த மழையினால் நிலம் நன்கு குளிர்ந்து இருந்ததோடு மழைச்சாரலில் தென்றல் காற்று மோதி வந்து மேனியில் பட எவ்வளவு இதமாய் இருக்கின்றது இவை எதையும் ரசிக்கம் நிலையில் இல்லை….. புவி தனது புத்தகப்பெட்டியினை பரபரப்பாக தேடிக்கொண்டு இருக்கின்றான் …அவன் தேடிக்கொண்டிருப்பது தனது திறமைகளின் பொக்கிஷமான சான்றிதழ்களை பெட்டியில் இல்லை….. கிடைக்க வில்லை சினம் கொண்டவன் தனது தாய் சுகந்தியை அழைக்கின்றான்…
தாயின் குரல் சமையல் அறையில் இருந்து என்னடா… என்ன வேணும் இப்படிக்காட்டுக்கத்து கத்திக்கொண்டு இருக்கின்றாய் என்னுடைய சான்றிதழ்கள் உள்ள பைல் எங்கே….
சாமியறையில் பார்த்தனான். அங்க கொண்டுபோய் யார் வைத்தது…

நீ தான்டா…… போனகிழமை ஏதோ…. ஒரு நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்விற்கு போய்ற்று வந்து இனியொருஇடமும் வேலை கேட்டுப்போறதில்லை  என்று சொல்லி  சாமியறையில் வைத்தாய் இப்ப அவசரமாய் ஏன் கேட்கிறாய்….இல்லம்மா நாளைக்கு ஒரு நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு போறன் இந்த வேலை கட்டாயம் கிடைக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இதே வார்த்தையைத்தான் சுகந்தி பல தடவைகள் தனது காதினில் கேட்டு பழக்கப்பட்ட தேவாரம் போல…. தனது மகனின் நம்பிக்கை தளரக்கூடாது என்பதற்காக…இந்த நேர்முகத்தேர்விலாவது வெற்றி பெறவேண்டும் என பெருமூச்சை வெளியேற்றியவள் சுவரில் தொங்கிகொண்டிருந்த தனது கணவனை பார்த்தவாறு சமயலறை நோக்கி நகர்ந்தாள்…

புவி தனது பயிலைத்திறந்தவன் தனது திறமைகளின் வெளிப்பாடான சான்றிதழ்களை புரட்டுகின்றான் அப்போது அவனது கண்ணில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கொடுத்த தங்க விருதினை பார்க்கிறான் பார்த்தவன் தனது கல்லூரி வாழ்க்கையில் நுழைகின்றான் சட்டக்கல்லூரியில் படிக்கும் போது ஏனைய மாணவர்களோடு விவாதம் பேசி வெற்றி பெற்றதினை எண்ணி சிரிக்கின்றான் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில்  பேராசிரியர் பேசும் போது இங்கே இன்றைய சட்டக்கல்லூரியின் மாணவர்கள் வழக்கறிஞர்களாக வெளியேற இருக்கிறார்கள் இவர்கள் கையில் தான் எமது நாளையசமுதாயம் உருப்பெறும் அநீதிகளை அகற்றி நீதியை நிலை நாட்டி தாய் நாட்டிற்கும் தனது சமூகத்திற்கும் ஜோதியாக விளங்க வேண்டும். சட்டத்தின் இருக்கும் ஓட்டைகளை நிரப்பவேண்டும் சட்டத்தின் படி நடக்க வேண்டும் மீறுபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் இன்று பெறுவது வெறும் பட்டம் அல்ல எமது நாட்டைக்காக்கும் சட்டம் என்று பேசி தனது உரையை நிறைவு செய்தார்.


புவி சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல சட்டத்தின் படி நடக்கும் நல்ல நேர்மையானவன் எல்லோருடனும் அன்பாகப்பழகுவான் பண்பாணவன் கல்லூரி வாழ்க்கையில் மூழ்கி இருந்தவனை தாய் என்னடா… எல்லாம் ரெடியா… இப்பவே எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிடு பிறகு விடியற்காலையில் அதைக்காணல்ல…. இதைக்காணல்ல…. என்று கத்தாம எனதாயின் உபதேசம் காதில் விழ கல்லூரி நினைவினை தனது தாயிடம் காட்டுகின்றான்.
தனது மகனின் சான்றிதழ்களை மிகவும் வாஞ்சையோடு வாங்கிப்பார்க்கிறாள். சுகந்தி பெரிதாக படிக்கவில்லை ஒரு வகையில்  அவள் ஏழைப்பெண் இருந்தாலும்  எல்லோருடனும் பழகி உலகறிவு  உடையவள் சுகந்தி வீட்டுப்பணிப்பெண்ணாக வேலை செய்துதான் தனது இருமகன்களையும் பல்கலைக்கழகப்படிப்பு மட்டும் படிக்கவைத்திருக்கிறாள் என்றால் எவ்வளவு கஸ்ரப்பட்டு இருப்பாள் தனது கணவனை விபத்தில் தொலைத்தவள் தனது இருமகன்களுக்காகவே வாழ்ந்து வருகின்றாள் நான் எல்லாம் இவ்வளவு படிக்கல்லடா…என்னுடைய பிள்ளைகள் இருவரும் நன்கு படித்தவர்கள் இருவருக்கும் நல்லதொரு வேலை கிடைத்தால் அதுவே சந்தோசம் இதுதான் உனது அப்பாவின் ஆசையும் என்று சொல்லி முடித்தவள்… வாடா நேரமாச்சு சாப்பிட்டுப்படு நாளைக்கு நேர்முகத்தேர்வுக்கு போகவேண்டும் அல்லவா… அம்மா தம்பி எங்க இவ்வளவு நேரமும் காணவில்லை எங்க போனவன்….

பக்கத்தில் விளையாடப்போயிருக்கின்றான். இப்ப வருவான் என்று சொல்லி வாய் மூடுவதற்குள் தம்பி கவின் வந்துவிட்டான். என்னம்மா…என்ன சாப்பாடு இரவுக்கு என்றவாறு குளித்து வி;ட்டு சாப்பாட்டு மேசையில் அமர்கின்றான். அண்ணா என்ன நாளைக்கு நேர்முகத்தேர்வா….. ஆம் அதுக்குத்தான் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறன்டா…கடவுளை நன்றாக வேண்டிவிட்டு போனால் எல்லாம் நல்லா நடக்கும் “நாம நினைப்பது ஒரு போதும் நடப்பதில்லை எல்லாம் அவன் செயல் சரி சாப்பிட்றிற்று நேரத்துக்குப்படுங்க என்றவாறு தாய் சுகந்தி உணவைப்பரிமாறினாள் உணவருந்தியபின் எல்லோரும் துயில்கின்றனர். ஆனால் புவிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை என்ன கேள்வி கேட்பார்கள் எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் என பல சிந்தனைகள் அவனிடம் எழுந்தன சரி உனக்குத்தான் வெற்றி பயப்படாத என தானே தனக்கு சொல்லியவாறு உறங்குகின்றான்.

புவி நேர்முகத்தேர்வில் கலந்து வெற்றி பெறுகின்றான் அவன் நினைத்தவாறு நல்ல வேலை எனி அம்மாவை வேலைக்கு அனுப்பக்கூடாது வீட்டில் வைத்து எனது உழைப்பில் பார்க்கணும் எங்களுக்காக எவ்வளவு கஸ்ரமும் துன்பமும் பட்டுக்கொண்டு இருக்கிறா…எனி வீட்டில் நிம்மதியா இருக்கட்டும் தம்பிக்கு நல்லதொரு கைத்தொலைபேசி வாங்கிக்கொடுக்க வேண்டும் அவனும் பெரியாளா வளர்ந்திட்டான் இப்ப எல்லோருடைய கையிலும் தொலைபேசி அப்படியே நானும் ஒரு போனும் மோட்டார் சைக்கிளும் எடுக்க வேண்டும் இனி எமக்கு நல்ல காலம் தான் இறைவன் பார்வை எம்பக்கம் பார்க்கிறான் இனி என்பக்கம் அதிஷ்ர காற்று வீசும் நான் தான் புவி என்று எல்லோருக்கும் அடையாளம் காட்டுவேன் என்றவாறே….
தொம்…ஐயோ…!

என்ற சத்தம் புவி கட்டிலில் இருந்து கிழே விழுகின்றான் கண்களை கசக்கியவாறு பார்க்கிறான் அருகில் தம்பி கவின் என்ன அண்ணா….கனவா கண்டாய் எனக்கேட்டு சிரிக்கின்றான் அப்போதுதான் புவி உணர்கின்றான் தான் கண்டது கனவுதான் என்று…கனவும் நனவாகும் என்று சொல்லிக்கொண்டு சாப்பாட்டு மேசையில் அமர்கின்றான் தாய் சுகந்தி உணவைப்பரிமாறுகின்றாள்  மூவரும் உணவருந்துகின்றார்கள்…. தாய் தனது வேலைக்காக புறப்படுகின்றாள் கவனமாய் போய்வாடா சரியம்மா… என்றவாறு புவி தனது பைலை கையில் எடுத்தவாறு பேரூந்து தரிப்பிடத்தினை நோக்கி நகர்கின்றான் தம்பி கவினும் ஏற்கனவே இடைநிறுத்தியிருந்த பயிற்சிக்காக செல்கின்றான்.

அண்ணா நானும் போய்ற்று வாறன் வர குறைந்தது ஆறுமாதங்கள் ஆகும் இந்தப்பயிற்சியை சிறப்பாக முடித்தால் நமது கனவு பலிக்கும் அண்ணா…ம்ம்ம் கவனமாய் போய்வாடா…சரிடா நானும் நேர்முகத்தேர்வுக்கு நேரமாய்ற்றுடா அவசர அவசரமாய் ஆட்டோ ஒன்றில் ஏறி தனது நிறுவனத்திற்கு வந்து சேர்ந்து விட்டான் மிகவும் வேகமாக உள்ளே நுழைகின்றான் அங்கு நேர்முகத்தேர்விற்காக நான்கு பேர்தான் இருக்கின்றார்கள்.

புவிக்கு சந்தோஷம்  நான் தான் வருவேன். ஒவ்வொருவரும் உள்ளே செல்லும் போது புன்னகையுடனும் வரும் போது சொல்லவே வேண்டாம்…! அதுதானே வழமை…அப்படி இப்படியென அந்த நான்கு பேரும் சோகமாக வெளியேறினார்கள் புவிக்கு சந்தோஷம் அதிகமானது நான் தான் தெரிவு செய்யப்படுவேன்  என எண்ணியவாறு உள்ளே செல்கின்றான்…
அதிகாரிகள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் படபடவென பதிலளித்தான் புவி தனது திறமைகளின் சான்றிதழ்களை சமர்ப்பித்தான் எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

புவியை வாழத்துவதற்காக கையைஎடுக்க தொலைபேசி மணி ஒலித்தது தொலைபேசியை எடுத்து காதில் வைத்தவருக்கு…மறுமுனையில் இருந்து…… அமைச்சர்பேசினார் எனது சொந்தக்காரப்பயல் வருவான் அவன்தான்…உம்முடைய பதவி உயர்வு நான் பார்த்துக்கொள்கிறேன்…தொடர்பு துண்டிக்கப்பட்டது.

புவியின் மீது அதிகாரி அனுதாபப்பார்வையை வீசினார்…. நிலைமையை உணர்ந்தவன் கண்ணில் இருந்து கட்டுக்கடங்காமல் கண்ணீர் சொரிய எழுந்தான் புவியின் முன்னே ஒருவன் வெறுங்கையோடு படித்தவன் போலவே தெரியவில்லை நான் தான் அமைச்சர் அனுப்பியவன் என்றான். புவி வெளியே வந்தான்…இந்தப்புவியிலே வாழப்பிடிக்கவில்லை புவிக்கு வெறுப்பாய் இருந்தது எல்லாத்திறமையும் என்னிடம் ஏன் எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை…வெறும் திறமையை வைத்துக்கொண்டு இன்றைய காலத்தில் ஒன்றுமே செய்யமுடியாது.


உனது டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு டிகிரி மாரி பிஸ்கட் கூட வாங்க முடியாது என நண்பன் அடிக்கடி சொல்லும் வார்த்ததை ஞாபகத்திற்கு வர உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து இந்த உலகில் சாதித்து விட முடியாது எல்லாரும் ஏறி மிதிக்கின்றார்களே…. கோபமும் கவலையும் ஒன்று சேர விரல்நகங்களை கடித்து துப்பிக்கொண்டு வீதியைப்பரத்துக்கொண்டு நின்றான் எனது விதி இதுதானோ…!

எதிரே ஒருவர் வங்கிஅதிகாரிபோல நின்றார் அவரது கையில் சிறிய பை அதில் ஏதோ..! பொருள் அதைப்பார்த்து கணக்குப்போட்டுக்கொண்டு இருந்தார்…அடிக்கடி மணியினையும் சரிபார்த்துக்கொண்டிருந்தார்  ஏதோ அவசரம் போல என நினைத்த புவி அவரிடம் வினா…. எழுப்பினான் அந்தப்பெரியவரும் மெல்லிய புன்னகையுடன் அவசரம் தான் ஆளைக்காணம் என்ன செய்யிறது என்றே தெரியல்ல…என்ன விடையம் சொல்லுங்க…இந்தப்பொதியை…..இந்த விலாசத்திற்கு கொண்டு போய் கொடுக்க வேணும் என்றவாறு விலாசம் எழுதிய சிறிய துண்டை நீட்டினார் அப்பெரியவர் புவியும் சரி நாமதான் வேலையில்லாம இருக்கிறம் இதைச்செய்தால் உதவியாக இருக்கும் தானே…தம்பி உன்னை எனக்கு முன்ன பின்ன தெரியாது படிச்சவன் போல இருக்கிற உன்னை நம்புறன் என்றவாறு அப்பொதியைக்கொடுத்தார்.

புவி சிரித்தவாறு ஆமாம் நான் படித்தவன் தான் வேலையில்லா....பட்டதாரிகளில் ஒருவன் பெரியவர் தனது சட்டப்பையில் இருந்து 5000ரூபாவினை எடுத்துக்கொடுத்தார் ரவி அதிர்ந்து போனான் என்ன சார் இந்த சின்ன உதவிக்கு இவ்வளவு பணமா…என்று கேட்க….நீ தான் வேலை இல்லாம இருக்கிற செலவுக்கு வைச்சுக்கொள்ளும் வேலை செய்ய விருப்பமுன்னா நாளைக்கும் இப்படி வடிவாக உடையணிந்து பைலோடு வா புவிக்கு ஆச்சர்ரியம் என்னடா இது இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா…! பணமும் கொடுத்து வேலைக்கு வரச்சொல்கின்றாரே சரி சேர் நான் போய்ற்று வாரன் தம்பி பொதி பத்திரம்…ரவி ஆட்டோ ஒன்றில் ஏறி விலாசம் உள்ள இடத்தில் இறங்குகின்றான் அது இரவுவிடுதி வாசலில் நின்று யோசித்தவனை அழகிய பெண்னொருத்தி அழைத்து சென்றாள் புவி தன்னைப்பற்றி சொல்ல முன் அந்தப்பெண் சொல்லி முடித்தாள்…

நீங்கள் புதியவர் எங்களுக்கு கொடுக்கப்பட்டடிருக்கும் வேலை இதுதான் என விளக்கினாள் புவி கொண்டு வந்த பொதியினை பிரித்து அதற்குள் இருந்த சிறிய சிறிய பைகளை வெவ்வேறாகப்பிரித்து இன்னொரு பொதிக்குள் நீலப்படச்சீடிக்களும் இருந்தது ஒவ்வொரு அறையில் இருக்கும் விருந்தினர்களுக்கும் கொடுக்க வேண்டும் இரவு விடுதியில் என்னென்ன நடக்கும் என்று உங்களுக்கு விளங்கப்படுத்த தேவையில்லை… நீங்கள் கொண்டு வந்த பொதியின் பெறுமதி பல இலட்சம் ரூபாய். பல லட்சம் ரூபாயா…! என வாய்திறக்க புதிய போனும் 50000 காசோலையும் கையில் கொடுத்தாள் அந்த அழகிய பெண்… புவிக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது கஞ்சா அபின் குடு போதைப்பொருட்களும் இளைஞர் யுவதிகள் விரும்பிப்பார்க்கும் நீலப்பட குறுந்தகடுகளையும் சொல்லும் இடங்களுக்கு கொண்டுபோய் கொடுப்பது தான் வேலை.

இதை என்னால் எப்படி செய்ய முடியும் என்னால் எமது இளையதலைமுறை அழியப்போகிறதே இப்படியான கேவலமான வேலை செய்துதான் உயிர் வாழ வேண்டுமா…? இது எனது தாய்க்கும் பிடிக்காது இது சட்டத்திற்கு முரணானது இந்த கொடிய செயலை செய்யத்தான் சட்டம் படித்தேனா…! வேண்டாம்! வேண்டவே வேண்டாம் இந்த ஈனச்செயல்….

எது வேண்டாம்… இதோ முன்னாள் நிற்கும் மோட்டார் சைக்கிளும் உமக்குத்தான் இன்னும் சில மாதங்களில்  கார்… பங்களா…. என பணக்காரணாகலாம்.இவையெல்லாம் வேண்டாமா…
படித்து பட்டம் இருக்கு வேலை இருக்கா….?
இங்கிருந்து வீட்ட போக பணம் இருக்கா….?
உம்மிடம் சொந்தமா ஒரு போன் அல்லது பைக்காவது இருக்கா…?
இவை எதுவுமே இல்ல பிறகு என்ன வேண்டாம் என்று சொல்லுகின்றீர் பெண் ஆன நானே இந்த வேலை செய்யிறன் அதுவும் நீர் ஒரு ஆண்….. பணம் இல்லையேல் பிணம்…சிந்தியும்….

புவியின் மனம் இவள் சொல்வதும் சரிதான் யார்தான் இப்பூமியில் நல்லவர்களாக இருக்கின்றார்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தாம் வாழ்வதற்காய் தப்பு செய்கின்றார்கள் தான் நீ கண்ட கனவுகள் எல்லாம் வீணாகிப்போய்விடும் கிடைக்கும் வேலையை கைவிடாதே…! தப்பான வேலைதான் என தெரிந்து கொண்டே சம்மதித்தான் மோட்டார் சைக்கிள் சாவி கொடுக்கப்பட்டது. மிகவும் சந்தோஷத்துடனும் சிறிய மனவேதனையுடனும் வீட்டை நோக்கி விரைகின்றான் அப்போது தொலைபேசி அலறியது நான் கே பேசுறன் புவி உமது பெயர் இனி சி தான் நாளைக்கு 08மணிக்கு வாரும் அழைப்பு துணிடிக்கப்பட்டது.

வீட்டுக்கு வந்தான் புவி தாய் சுகந்தி வியந்து போய் நின்றாள் நேர்முகத்தேர்வுக்குப்போனவன் போன் பைக் இவனுக்கு இது எல்லாம் எங்கால…தாயின் வியப்பை புரிந்து கொண்டவன் புவி அம்மா எனக்கு பெரிய வெளிநாட்டுக்கம்பனி ஒன்றில் வேலை கிடைச்சிருக்கு அவங்கதான் இவை எல்லாம் தந்தார்கள் என்று பெரிய பொய் ஒன்றை உரைத்தான்… தாய் சுகந்தி ஓ… பெரிய வேலையாக இருக்குமோ…!

எனது மகன் சட்டத்தரணியல்லோ….பெருமூச்சுக்கிளம்ப….
நாட்கள் வேகமான ஓடியது புவி பெரிய மேல்மாடி வீடு விலைக்கு வாங்கினான் தம்பிக்கு விலையுயர்ந்த போன்வாங்குவதற்கு சொனிநிறுவனத்திற்கு முன்பணம் செலுத்தியிருந்தான் தாயைவேலைக்கு போகவேண்டாம் என நிறுத்தியிருந்தான். இவ்வாறாக ஆறு மாதங்கள் ஆறுபோல கடந்தது. புவிக்கு குறைந்தத 10தடவையாவது தொலைபேசி அழைப்பு வரும் தாய் சுகந்திக்கு சிறிய சந்தேகம் என்ன பெரிய வேலை காலையில் போறான் மாலையில் வாறான்

கஸ்ரப்படுகிறமாதிரி தெரியவில்லை. ஏதோ நல்ல வேலையாக இருந்தால் சரி என நினைத்துக்கொண்டிருக்க தொலைபேசி அலறியது எடுத்து காதில் பொருத்தினாள்…..
கலோ….சி…நான்…. கே…பேசுறன் நாளை காலை நேரத்திற்கு வாரும் சனிக்கிழமை எல்லாம் அனுப்பனும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் நான் தந்த பாசல் கவனம் அதில் பல கோடி ரூபாய் இருக்கு வீட்டில ஒருவருக்கும் தெரிய வேண்டாம். என சொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சுகந்தியின் சந்தேகம் வலுப்பெற்றது நேராக தனது மகனின் அறைக்குச்சென்று அலுமாரியினை திறந்தால் தொலைபேசியில் சொன்னது போலவே பாசல் ஒன்று இருந்தது இதற்குள் பல கோடியா… அப்படி என்ன இருக்கும் பையை விரித்தாள் சுகந்தியின் தலையில் இடி இறங்கியது அதிர்ந்து போனாள் என்மகனா இப்படி….அப்பையில் இருந்து பலவகையான போதைப்பொருள் பொட்டலங்கள் பல நுறு குறுந்தகடுகள் இரண்டு துப்பாக்கிகள்…சுகந்தியின் தலைக்குள் எரிமலை வெடிப்பு தீக்குழம்பாய் கோபம் அனல் கக்கியது எனது தாய் நாட்டை சீரழிக்கும் கொடியவர்களில் என்வயிற்றில் பிறந்த என்மகனும் ஒருவனா…. இவனை உயிரோடு விடக்கூடாது விட்டாள் தப்பித்துக்கொள்வான் ஏன்எனில் அவன்தான் சட்டத்தரணியே…! நாட்டை குட்டிச்சுவராக்கும் இந்த தேசத்துரோகிகளை சும்மா விடக்கூடாது உயிரோரு நடுரோட்டில் போட்டு எரிக்கனும்.

சுகந்தி தாய் தாய் என்பதை மறந்து வீரபத்திர காளிபோலானாள் தேசப்பற்று மேலோங்கி நின்றது என் இரத்தம் இப்படியா….? கண்ணில் தென்பட்ட துப்பாக்கியைn எடுத்து முந்தானையில் மறைத்துக்கொண்டாள் மெதுவாக வெளியே வந்தாள் கதவோரம் காத்து நின்றாள் முகத்தில் தேசத்துரோகியின் தாய்  நான் என்ற பழியுணர்வோடு…
ஆழகாக உடையணிந்து மாப்பிள்ளைக்கோலத்தில் தனத பிறந்த நாள்பரிசாக பெரியமாடி வீட்டுத்திறப்பையும் தம்பிக்கான புதிய ஐ போனினையும் தாயின் காலடியில் வைத்து விட்டு என்னை ஆசிர்வதியுங்க அம்மா என்றவாறே காலில் விழுந்தான் புவி தாய் சுகந்தியோ சிலைபோல நின்றாள்….
அம்மா இன்று எனக்கு பிறந்த நாள் நான் நேரத்திற்கு போகவேண்டும் ஆசீர்வதியுங்கள்  என்றான். டேய்….! புவி என்ன வேலை பார்க்கிறாய்…?
இந்த மாடிவீடு சொந்தப்பணத்தில் வாங்கினாயா…? கொள்ளையடித்தாயா…? சொல்லுடா…? உழைத்து வாங்கியது தான் அம்மா…

எமது தாய்நாட்டையும் எமது இளையதலைமுறையினையும் சீரழித்து உனக்கொரு சந்தோஷமான வாழ்க்கையா… நீ எனது மகனா…? எனது இரத்தம் தேசப்பற்றில் ஊறிப்போனது நீ என் மகன் இல்லை நீ ஒரு தேசத்துரோகி …. நீ உயிரோடு இருக்கவே கூடாது…. புவி சும்மா போம்மா….இன்னும் இந்த உலகத்தினை

புரிஞ்சுக்காம இருக்கிறிங்க…பணம் இருந்தாதான் எங்களையும் மதிப்பாங்க இல்லைனா கால்ல போட்டு மிதிப்பாங்க யார்தான்… நல்லவங்க எல்லோரும் ஏதோ...!

ஒருவிதத்தில் கெட்டவங்கதான் நான் செய்யிற ஒன்றும் பெரியதொரு தேசத்துரோகம் இல்ல… என்னை விட இந்த நாட்டில் இன்னும் எத்தனையோ பேர் பாதவி அதிகாரம் நல்லவர்கள் எனும் போலி முகமூடிகளை அணிந்து கொண்டு பணம் எனும் மந்திரத்தால் ஆட்டிப்படைக்கிறாங்க அதொல்லாம் குற்றமில்லையா…?  தேசத்துரோகமில்லையா…? எங்களை வளர்க்க பணத்திற்காக நீங்கள் துன்பப்படும் போது யார்……கண்டுகொண்டார்கள் நேரமாச்சு அம்மா நான் போகனும் விடமா என்னை நீ திருந்த மாட்டியா…..

நான் திருந்தினாலும் என்ன இந்த சமுதாயம் திருந்த விடாது என்னை மாற்றியதே இந்த சமுதாயம் தானே எனக்கு தேவை பணம் தான் எனச்சொல்ல சுகந்தியால் கோபத்தினை அடக்கிக்கொள்ளமுடியவில்லை ஏய் நில்லடா…! என்றவாறு துப்பாக்கியை நீட்டினாள்…

அம்மா அவசரப்படாதீங்க அது உண்மையான துப்பாக்கி புள்ள ரவுன்ஸ்-சன்னம் இருக்கு அழுத்திய வெடிக்கும் என்று சொல்லவும் சுகந்தி அழுத்தினாள்  அதில் இருந்து வெளிப்பட்ட சன்னம் மின்னல் வேகத்தில் பாய்ந்து புவியின் மார்பில் இறங்கியது. ஓன்று இரண்டல்ல மூன்று சன்னங்கள் புவி ஆலமரம் சாய்வது போல சரிந்தான் நான் செய்யும் வேலை தவறு என்று எனக்கு தெரியும் நீங்களும் தம்பியும் இப்படிக்கஸ்ரப்படுறத பாத்திற்கு என்னால சும்மா இருக்க முடியல்ல…

எனது கனவு நினைவாகிற்று தம்பிக்கு போனும் மோட்டார் பைக்கும் உங்களுக்கு மாடி வீடும் வாங்கினேன் நீங்களும் தம்பியும் சந்தோஸமா இருங்க…நான் கொடுத்து வைத்தவன் எனது பிறந்த நாள் அன்று என்னைப்பெற்ற தாயின் கையினாலே இறக்கப்போகின்றேன்….சுகந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆவியாக மனம் சுகந்தியை பேசியது நீ எல்லாம் ஒரு தாயா…? பெற்றமகனையே சுட்டுக்கொலை செய்துவிட்டாயே…!
 நீ செய்தது துரோகம் இல்லையா…?

இந்த தேசத்தினை நீ நினைத்தால் மட்டும் காப்பாற்ற முடியாது...? அனைவரும் ஒன்று சேரவேண்டும் உன்மகன் மட்டுமல்ல தேசத்துரோகி இன்னும் எவ்வளவோ பேர்...... நல்லவர்கள் எனும் போர்வையில் இந்த நாட்டினையும் எமது இளையதலைமுறையினையும் திட்டமிட்டு அழித்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களை உன்னால் என்ன செய்ய முடியும்….!!!

பத்து மாதம் சுமந்து பெற்ற மகனையே பத்து செக்கனுக்குள் சுட்டுவிட்டாயே….! உன் முன்னாடி குற்றுயிராய் கிடக்கிறான் பார்... நன்கு பார்... சுகந்தி தாய்மையுணர்வோடு தன் மகனைப்பாரக்கிறாள் புவி நில்.... நானும் வருகின்றேன் என்றவாறு தன்மகனை சுமந்த மார்பினில் துப்பாக்கியை வைத்து அழுத்தினாள் மகனருகில் சுகந்தியும் விழுந்தாள். அம்மா தம்பி அநாதையா…இருவரின் உயிரும் காற்றோடு கலந்தது.

தேசியப்பயிற்சியை முடித்துக்கொண்டு முதல் மாணவன் என்ற பெருமையோடு வீடு நோக்கி விரைந்து வருகையில் வீட்டினைச்சுற்றி மக்கள் கூட்டமாக நின்றனர் கூட்டத்தின் இடையில் புகுந்து உள்ளே பார்த்தான்  கோடி மின்னல்கள் தாக்கியது கவினை கருகிப்போனான்……

அண்ணனின் மார்பிலும் அம்மாவின் மார்பிலும் சன்னங்கள் பாய்ந்திருந்த இரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரின் கண்களை மூடியவன் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே….!
நிமிர்ந்தான் நடந்தவற்றை ஊர்மக்கள் விளக்கினார்கள.சம்பவத்தினை புரிந்து கொண்டான் தாயின் கல்லறையில் தேசத்தினை நேசித்தவள் என்றும் தமையனின் கல்லறையில் தேசத்துரோகி....!என்றும் பொறித்திருந்தார்கள் இதைப்பார்த்தவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக…தாயின் கல்லறையில் சபதம் எடுத்தான் தாய்நாட்டையும் எமது இளம் தலைமுறையினையும் காப்பேன் என்னுயிரை எனது தாய்நாட்டின் எழுச்சிக்கு வித்தாக்குவேன்…!

மீண்டும் தேசிய பாதுகாப்பு சபைக்கு இணைய சபதத்தினை நிறைவேற்ற கவின் வீறுநடைபோடுகின்றான். தாயினையும் தாய்நாட்டினையும் எண்ணியவாறு………..


-கவிஞர்-வை.கஜேந்திரன் -
 "தேங்காய்"சிறுகதை தொகுப்பில் இருந்து.
எனது தேசம்......................சிறுகதை Reviewed by Author on November 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.