இங்கிலாந்துடன் மோதும் இலங்கை: கைகொடுக்குமா காலே மைதானம் -
இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு போட்டி கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது.
இதனை அடுத்து இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
காலே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரங்கனா ஹெராத், லக்ஷன் சன்டகன், அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீப காலங்களில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வருகிறது.
அத்துடன் இலங்கை வீரர்களின் சுழற்பந்து வீச்சு நிச்சயம் இங்கிலாந்து அணியினருக்கு சவாலாக இருக்கும்.
இலங்கை-இங்கிலாந்து அணிகள் இதுவரை 31 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 12 டெஸ்டிலும், இலங்கை அணி 8 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இங்கிலாந்துடன் மோதும் இலங்கை: கைகொடுக்குமா காலே மைதானம் -
Reviewed by Author
on
November 06, 2018
Rating:

No comments:
Post a Comment